விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவனேசத்துரை சந்திரகாந்தனை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று (29) பார்வையிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இன்று சென்றிருந்தார்.
இதனையடுத்து, நாமல் ராஜபாக்ஸ பின்வருமாறு தெரிவித்தார், மூன்று வருடங்களாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நான் அறிந்த வகையில் அவர் பயங்கரவாதத்தினைக் கைவிட்டு, பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்கு வந்த ஒருவர்.
இன்று பயங்கரவாதத்தில் இருந்தவர்களுக்கு விடுதலை கிடைக்கின்றது. ஆனால், பயங்கரவாதத்தினை தோற்கடிக்க வந்தவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனையை அனுபவிக்கின்றனர். பிள்ளையான் எங்களுடன் செயலாற்றிய ஒருவர்.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் யுத்தத்தின் போது யுத்தத்தினை வெற்றி கொள்வதற்கு இராணுவத்தினருக்கு பாரிய சக்தியாக இருந்தவர் . அதனால் அவரைப் பார்த்து விட்டு செல்ல வந்தோம்.
No comments:
Post a Comment