பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது கல்வீச்சு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது கல்வீச்சு

பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் – முருசான பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மையைக் கட்டுப்படுத்த சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (28) அதிகாலையில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரையில் அடையாளங்காணப்படவில்லை.

No comments:

Post a Comment