அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் காமினிபுர பகுதியில் மிகவும் சூக்சுமான முறையில் ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை அட்டன் பொலிஸார் நேற்று மாலை 04.09.2018 கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர்களிடமிருந்து பொதி செய்யப்பட்ட 18 சிறிய பக்கட்டுக்களில் 940 மில்லிகிராம் மீட்கப்பட்டுள்ளன. இந்த இளைஞர்கள் போதை பொருள் விற்பனையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவல் ஒன்னையடுத்து.
அட்டன் கடமை தலைமையக அதிகாரி தர்மகீர்த்தி அவர்களின் ஆலோசனைக்கமைய,அட்டன் குற்றத்தடுப்பு மற்றும் இரகசிய தகவல் பிரிவு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பினையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் இளைஞர்கள் கொழும்பிலிருந்து போதை பொருள் கொண்டு வந்து ஒரு சிறிய பக்கடடுகளுக்கு பொதி செய்து பக்கட் ஒன்று ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இதற்கு முன்னரும் மூன்று தடைவைகள் கைதாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்டு ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
இந்த சந்தேக நபர்கள் அட்டன் பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மூவரையும் ஹேரோயின் போதை பொருள் தொகையினையும் நாளை அட்டன் நீதமவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment