நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் சர்வதேச தகவல் அறியும் தினத்தை கொண்டாடும் நோக்கில் நடாத்தப்பட்ட தமிழ் மொழிமூல விவாத போட்டியில் கெகுணகொல்ல தேசிய பாடசாலை இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.
இரண்டாமிடத்தை பெற்று கெகுணகொல்ல தேசிய பாடசாலைக்கு அகில இலங்கை ரீதியில் கௌரவத்தை பெற்றுத்தந்த எம்.ஐ.இன்சாப், எம்.எச்.எப்.ஹனா, ஏ.எச்.எப். சஹ்னாஸ், யூ.சி.திரீனா ஆகிய பாடசாலைகளை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேறறு (28) நெலும் பொக்குன அரங்கில் ஜனாதிபதி மைத்ரிபாலசிரிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் அதிபர் முதம்மிர் மற்றும் குளியாப்பிடிய பிரதேசசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் ஏம்.சி. இர்பான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
றிம்சி ஜலீல்
No comments:
Post a Comment