மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு விஷேட நீதிமன்றத்துக்கு? - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு விஷேட நீதிமன்றத்துக்கு?

கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், லங்கா சதொச நிறுவனத்தால் கெரம் போர்ட் கொள்வனவு செய்த போது சுமார் 53 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை கோட்டை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு பிற்போட்டு உத்தரவிட்டுள்ளது. 

இன்றைய (04) விசாரணையின் போது, சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதா அல்லது விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதா என்று ஆராய்ந்து கொண்டிருப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மன்றில் தெரிவித்தது. 

அதன்படி வழக்கு நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு பிற்போட்ட நீதிமன்றம் அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment