மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

இலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் ரூபா 2 கோடி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த மே 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 03 ஆம் திகதி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து, இலஞ்சத் தொகையை பெற்றுக்கொள்ளும்போது குறித்த இருவரும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும், கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான இரும்பு தொகுதிகளை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவது தொடர்பில் அந்நிறுவனத்திடமிருந்து ரூபா 54 கோடி இலஞ்சம் கோரியதாகவும், அதற்கான முற்பணமான ரூபா 2 கோடியை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து பெற்றுக் கொள்ள முற்பட்ட வேளையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த மே 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment