முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவித்து இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி வரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக இன்று (04) காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜுனைதீன் முகம்மட் பஹத் அவர்களினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் கொழும்பில் ஊடகங்களை அழைத்து கருத்து வெளியிட்டிருந்த இன்பராசா, முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளதாக பொது வெளியில் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்பராசாவின் கூற்றுக்கெதிராக அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களையும் கண்டனங்களையும் வெளியிட்டு வந்தனர்.
எம்.எஸ.எம். நூர்தீன்
No comments:
Post a Comment