இலங்கை இராணுவத்தில் மேஜராக கிளிநொச்சி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த மேஜர் தாவூத் அனஸ் அஹமட் கடந்த சனிக்கிழமை (01.09.2018) முதல் லெப்டினன் கேர்ணலாக பதவியுயர்வு பெற்றள்ளார்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் 1994ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இலங்கை இராணுவத்தில் லெப்டினன் கேர்ணலாக பதவியுயர்வு பெற்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும்
லெப்டினன் கேர்ணர் அனஸ் அஹமட் 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏறாவூர் அலிகார் வித்தியாலயத்தின் அதிபரும் கல்விமானுமான தாவூத் அதிபரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment