வரவு – செலவு திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்தறிவதற்காக நாடாளுமன்ற நிதிக்குழு நாளை (03) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது.
நிதிக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நாளை முற்பகல் இக்குழு கூடவுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத் திட்டத்திற்கும், அதன் பின்னரும் நிதி முன்மொழிவுகளை அவதானித்து செயற்படுத்தும் வகையில் இக்குழு புதிதாக உருவாக்கப்பட்டது.
அந்த வகையில், இக்கூட்டத்தில் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்குழு தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி மக்களின் கருத்துக்களை அறியவுள்ளது.
இக்கூட்டத்தில் நிதிக்குழு அங்கத்தவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய 7 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். வரவு – செலவு திட்டத்தை தயாரிக்கும் திணைக்களம்சார் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment