விற்பனைக்காக 12 கஜ முத்துக்களை எடுத்துச் சென்று கொண்டிருந்த நான்கு பேர் பொலன்னறுவை சிறிபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நடவடிக்கையின் கீழ் பொலன்னறுவை வலய சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினால் நேற்று (31) பொலன்னறுவை சிறிபுர பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 12 கஜமுத்துக்களுடன் மூன்றரை இலட்சம் ரூபா பணமும் சந்தேகநபர்கள் பயணித்த வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் ஹெட்டிபொல பிரதேசத்தில் இருந்து பொலன்னறுவை பிரதேசத்திற்கு விற்பனைக்காக அவற்றை எடுத்து வந்துள்ளனர். பிபலை, ஹசலக மற்றும் ஹெட்டிபொல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment