உண்மைகள் ஓரங்குலம் நகர்வதற்குள் பொய்கள் விஷம் போல ஏறுகின்றன பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 2, 2018

உண்மைகள் ஓரங்குலம் நகர்வதற்குள் பொய்கள் விஷம் போல ஏறுகின்றன பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

பொய்கள் இல்லாமல் சரியான முறையில் வேலை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். உண்மைகள் ஓரங்குலம் நகர்வதற்குள் பொய்கள் விஷம் போல ஏறிக்கொண்டு செல்கின்றது. எனவே விடயங்களைத் தீர விசாரித்து அறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். இன்று (02) இடம்பெற்ற ஈரளக்குளம் பிரதேச மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், கிரான்புல் அணைக்கட்டுக்கு எமது மாவட்டத்தைச் சேர்ந்த உயரதிகாரியே தடையாக இருக்கின்றார். உயரதிகாரியாக ஒருவர் இருந்தால் அவருடைய மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் கூடிய கவனம் எடுப்பார். ஆனால் துரதிஸ்டவசமாக அவ்வாறு எண்ணக்கூடிய ஒருவர் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது. இந்த வேலையை நாங்கள் வேறு வழிமுறைகளில் அணுகியிருக்கின்றோம்.

இங்கு குறிப்பிடப்பட்ட ஒப்ப விடயம் தொடர்பில் குறித்த அதிகாரியுடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கதைத்த போது காணிக் கச்சேரி விரைவில் நடாத்தப்பட்டு ஒப்பத்திற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். யானை வேலி தொடர்பிலும் உரிய அமைச்சரைத் தொடர்பு கொண்டு பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

பாலம் பற்றிய விடயங்களை கிராமிய பாலங்கள் என்பதன் மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்டு செய்யப்படாத பாலங்களை உரிய அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி தற்போது 15 பாலங்கள் வரையில் செய்திருக்கின்றோம். அத்துடன் தற்போது இப்பிரதேசத்தில் குறிப்பிட்டப்பட்ட இரண்டு பாலங்களுடன் சேர்த்து 44 சிறிய பாலங்கள் அடையாளம் காணப்பட்டு அனுப்பியிருக்கின்றோம். அதற்குரிய அடுத்த கட்ட செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அண்மையில் ஜனாதிபதி செயலணியிலும் கைத்தொழில் பேட்டைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். எமது செயற்பாடுகளில் ஊழல், மோசடிகள், லஞ்சங்கள் எதுவும் இல்லாமல் சரியாக எமது மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் குறியாக இருக்கின்றோம்.

சில வேளைகளில் தவறான, பிழையான பிரச்சாரங்கள் எம்மீது சுமத்தப்படுகின்றன. யாரோ செய்யும் பிழைகளை எமது தலைகளில் சுமத்துகின்ற விடயங்கள் இடம்பெறுகின்றன. இந்த விடயங்கள் தொடர்பில் எம்முடன் நெருங்கி ஆராய்ந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அரசியல் என்னும் போது பல பொய்ப்பிரசாரங்கள் வரும். அவ்வாறன பொய்கள் இல்லாமல் சரியான முறையில் வேலை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். உண்மைகள் ஓரங்குலம் நகர்வதற்குள் பொய்கள் விஷம் போல ஏறிக்கொண்டு செல்கின்றது. எனவே விடயங்களைத் தீர விசாரித்து அறிய வேண்டும். யார் யார் என்ன பொய்களைச் சொன்னாலும் அதன் உண்மை நிலைகளை அறிவது எம்மைப் பொருத்தே இருக்கின்றது. 

தற்போதும் பொய்கள் சொல்லுகின்ற காலம் நெருக்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் பல பொய்கள் கூடுதலாக வரும். இந்தப் பொய் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லாமல் உண்மையான நீரோட்டத்தில் மக்கள் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment