புத்தளம் பிரதேச சபைத் தலைவர் அஞ்சன சந்தருவனுக்கு வழக்கு முடியும் வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்த மத்தும பட்டபெந்திகவினால் இன்று (17) இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.
பிணை விதிகளை மீறி, கடந்த வாரம் (10) வெளிநாடு செல்ல முற்பட்டமை தொடர்பில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், மதுரங்குளி நகரில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொள்ள, பஸ்களில் சென்ற ஆதரவாளர்கள் மீது, ஆணமடுவ, தோணிகல பிரதேசத்தில் வைத்து, துப்பாக்கியால் சுட்டதன் மூலம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞன் ஒருவன் பலியான சம்பவம் தொடர்பில் அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது.
குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபரான அவர், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தோனேஷியாவில் இடம்பெறும், தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி கட்டுநாயக்கா விமானநிலையம் சென்ற போது, அவர் விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் புத்தளம் மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment