தரம் குறைவாக பாண் உற்பத்தி செய்யும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினையால் பாண் விலையுடன் சில பேக்கரி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பாண் விலை மட்டுமே 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
அதனால் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் நுகர்வோர் அவதானமான இருக்க வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
No comments:
Post a Comment