அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தக விநியோகத்தின் முதல் கட்டம் நாளை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 2, 2018

அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தக விநியோகத்தின் முதல் கட்டம் நாளை ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தக விநியோகத்தின் முதற்கட்டப் பணி மூன்றாம் தவணை பாடசாலை ஆரம்பத்துடன் முன்னெடுக்கப்படுமென்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

419 பாடங்களுக்கான 3 கோடி 80 இலட்சம் பாடப்புத்தக்கங்கள் இம்முறை அச்சிடப்பட்டுள்ளன. மேல் மாகாணப் பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதாக கல்வி வெளியீட்டுப் பிரிவின் ஆணையாளர் நாயகம் திருமதி பத்மினி நாலிகா வெலிவத்த தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக உயர்தர மற்றும் உயர்கல்விக்கான ஆசிரியர்களுக்குத் தேவையான மேலதிகமாக 359 பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment