வெளிநாட்டு உற்பத்திகளை தவிர்த்து நாம் உற்பத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை நாம் முன்னேற்ற முடியும் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 30, 2018

வெளிநாட்டு உற்பத்திகளை தவிர்த்து நாம் உற்பத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை நாம் முன்னேற்ற முடியும்


நாட்டிற்கு அந்திய செலவானியை பெற்றுத்தரக் கூடிய விவசாயிகளை முதன் முதலில் இங்கு சந்தித்ததில் நான் பெருமையடைகிறேன் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அம்மந்தனாவெளி கிராமத்தில் மேற்கொள்ளப்படும் ´பிப்பிஞ்சா´ உற்பத்திகளை நேற்று (29) மாலை பார்வையிட்டதுடன், வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ´பிப்பிஞ்சா´ உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வாகரை பிரதேச மக்களின் பிரதான தொழில் மீன்பிடி என்று அறிந்திருந்தும் அம்மக்கள் இன்று அதனுடன் நாட்டுக்கு அந்திய செலவானியை பெற்றுத்தரக் கூடிய விவசாய தொழிலை செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கின்றார்கள் என்றால் அதன் கௌரவம் ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையே சாரும். 

இன்று நாட்டின் ஏற்றுமதி குறைந்து காணப்படுகின்றது. அதனால் தான் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து காணப்படுகின்றது. விவசாயிகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் விவசாயத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் விவசாயிகளுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை செய்து வருகின்றது அதில் ஒரு பகுதி தான் இன்று வாகரை பகுதியில் இடம் பெற்று வரும் ´பிப்பிஞ்சா´ உற்பத்தியாகும். 

´பிப்பிஞ்சா´ உற்பத்திக்காக அரசாங்கம் ஒன்பதாயிரம் மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது அதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தொல்லாயிரம் மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறையை மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியுள்ளார். 

நாம் இன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உணவுகளையே அதிகம் உண்டு வருகின்றோம் அதனை தவிர்த்து நாம் உற்பத்தி செய்து நாம் உண்போம் என்ற திட்டத்தில் உற்பத்திகளை செய்யும் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் அதன் மூலம் தான் எமது நாட்டின் பொருளாதாரத்தை நாம் முன்னேற்ற முடியும். 

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் ஜனாதிபதி விவசாயத்துறைக்கு அதிக பங்களிப்புக்களை செய்து வருகின்றார் மூவாயிரத்தி ஐநூறு ரூபாவிற்கு உரத்தினை கொள்முதல் செய்த நெல் உற்பத்தியாளர்களுக்கு ஐநூறு ரூபாவிற்கும் ஏனைய பயிர் உற்பத்தியாளர்களுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாவிற்கும் வழங்கி வருகின்றோம் விவசாயிகள் கஸ்டப்படக் கூடாது என்பதற்காக அரசாங்கம் மிகுதிப்பணத்தினை செலுத்துகின்றது. 

இளைஞர்களை விவசாயத்தில் அதிகம் ஈடுபடக் கூடியவர்களாக மாற்றி அவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதுடன் நாட்டின் பொருளாதாரத்தினையும் எதிர்காலத்தில் முன்னேற்றுவதற்கு இப்பகுதி இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் வாகரை பிரதேச சபை பிரதி தவிசாளருமான டி.எம்.சந்திரபால, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.பி.முஸம்மில், ஓட்டாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, வாழைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ரி.யசோதரன் மற்றும் விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

குகதர்ஷன்

No comments:

Post a Comment