கூட்டு எதிர்க்கட்சியினர் நளைய தினம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவில் தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டு மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் தாக்கல் செய்த இந்த மனு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினர் நளைய தினம் "மக்கள் பலம் கொழும்புக்கு" என்ற கருப் பொருளில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் பொது மக்களில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு எற்படும் என்றும், இதன்காரணமாக ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment