சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நாளை புதன்கிழமை (05.09.2018) காலை சுனாமி ஒத்திகை நடவடிக்கைகளுக்காக இயங்கச் செய்யவுள்ளதால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ள ஏழு இடங்களில் சுனாமி ஒத்திகை நடவடிக்கைகளுக்காக சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் இயங்கச் செய்யவுள்ளன.
புதன்கிழமை (05.09.2018) காலை 9 மணி தொடக்கம் காலை 10 மணி வரை இந்த நடவடிக்கை இடம் பெறுவதால் பொது மக்கள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு, ஏறாவூர் பற்று, வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கரையோரப்பகுதிகளில் இந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோபுரங்கள் இயங்கச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே நேரம் சுனாமி ஒத்திகை பயிற்சி நடவடிக்கை அம்பாறை, காலி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரியளவில் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment