தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடித்து 8 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடித்து 8 பேர் பலி

தென் ஆப்ரிக்கா நாட்டின் கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஆப்ரிக்கா நாட்டின் தலைநகரமான கேப் டவுனில் சாமர்செட் நகரின் மேற்கு பகுதியில் ஆயுத கிடங்கு அமைந்துள்ளது. இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். வெடி விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment