பாராளுமன்றத்திற்கு புதிதாக 232 ஆசனங்கள் கொள்வனவு செய்யப்படவிருப்பதாக வெளியான ஊடக அறிக்கைகள் அடிப்படையற்றவை என்று சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பாராளுமன்ற சபைக்குள் மாற்றங்களை மேற்கொள்வது பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. எந்தளவு பழமையானதாக இருந்தாலும் குறைந்த செலவில் உரிய பொருட்கள் திருத்தப்படவுள்ளன.
பாராளுமன்றத்தின் வரலாற்று அடையாளங்களில் மாற்றங்களை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது. பாராளுமன்றத்தின் கூரை, வடிகான் கட்டமைப்பு என்பனவற்றை திருத்துவது பற்றி மாத்திரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment