ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, September 3, 2018

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 12 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது பால்க் மாகாணம். இந்த பகுதியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஆப்கன் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் உக்ரேனிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 14 பேர் பயணித்தனர். 

பால்க் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

விசாரணையில், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது என ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment