நேபாளத்தில் விமானம் தரை இறங்கியபோது விபத்து - 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 3, 2018

நேபாளத்தில் விமானம் தரை இறங்கியபோது விபத்து - 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நேபாளத்தில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்று விபத்து ஏற்பட்டது, இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. 

நேபாள நாட்டின் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்துக்கு நேபாள்கஞ்ச்சிலிருந்து 21 பயணிகளுடன் ஒரு விமானம் சனிக்கிழமை இரவு வந்தது. விமானம் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்றதால் விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

ஆனாலும் விமான போக்குவரத்து சுமார் 12 மணி நேரத்துக்கு தடைபட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் சரிசெய்யப்பட்ட அந்த ஓடுபாதையின் மேல் பகுதியில் விரிசல்கள் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

No comments:

Post a Comment