தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேருக்கு எதிராக இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் பன்படுத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கான ஒரு தொகு ஆடை, நான்கு குண்டுகள், ஒன்பது மில்லிமீற்றர் ரகத்தை சேர்ந்த 100 ரவைகள் உள்ளிட்ட வெடிபொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக தெரிவித்து சட்ட மாஅதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிறிநொச்சி பகுதிகளில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மற்றும் அதனை அண்மித்த காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சந்தேகநபர்கள் பைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment