கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பின் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்களுக்கு தேவையான மருத்துவ தேவைகளுக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்காக நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வின் போது இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தர நிர்ணய நிலையத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு இராணுவ வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட இச்சான்றிதழை (ISO 9001 - 2015/SLSI ISO 9001 - 2015) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக, தர நிர்ணய நிலையத்தின் தலைவர் பந்துல ஹேரத் மற்றும் தர நிர்ணய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர். சுசந்திகா சேனாரத்ன ஆகியோரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
நாட்டின் ஒரு அரச மருத்துவமனையானது ISO 9001 தரச் சான்றிதழை பெற்றுகொள்வது இதுவே முதல் தடவையாகும். இவ்வைத்தியசாலையானது, வெட்டும் விளிம்பு மருத்துவ தொழில்நுட்ப உபகரண வசதிகளுடன் 2014 ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
மேலும், இங்கு 1024 படுக்கைகள், 21 கலங்கள், 12 பல் அறுவை சிகிச்சை பிரிவுகள், 9 அறுவை சிகிச்சை தியேட்டர்கள், எம்ஆர்ஐ ஸ்கேனிங் வசதிகள், தானியங்கி எக்ஸ்ரே இயந்திரங்கள், நோயியல், கதிரியக்க மற்றும் தோல் நோய் அலகுகள் மற்றும் தொழிலாளர் அறை போன்ற நவீன வசதிகளுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட இவ்வைத்தியசாலையின் கூரையின் மேல் உலங்கு வானூர்தி இறங்குதளம் மற்றும் 314 இருக்கைகளை கொண்ட கேட்போர் கூடம் என்பன காணப்படுவதுடன், அன்றாடம் சுமார் 1000 வெளிநோயளர்களுக்கு சேவை வழங்கக் கூடியதாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment