பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தங்க மாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த 31ம் திகதி அந்த சந்தேகநபர் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் அவர் களுத்துறை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த 02ம் திகதி அவருக்கு ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (04) காலை அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment