க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் புகை விசிறல் நடவடிக்கை சுகாதாரப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பொதுச் சுகாதாரபரிசோதகர் பி. இராஜேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் புகைவிசிறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
க.பொ.த உயர்தரப்பரீட்சை, நாளை மறுதினம் (06) நாடு முழுவதிலுமுள்ள 2,268 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. இபரீட்சைகளுக்கு சுமார் 320,000 பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment