காட்டு யானை தாக்கி இளைஞன் ஸ்தலத்தில் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

காட்டு யானை தாக்கி இளைஞன் ஸ்தலத்தில் பலி

அம்பாறை மாவட்ட எல்லைக் கிராமமான 'றாணமடு' 'மாலையர்கட்டு' கிராமத்தில் காட்டு யானையினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலையர்கட்டு கிராமத்தில் நேற்று (31) அதிகாலை 5.30 மணியளவில் அவரது வீட்டு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது பிரதேசத்தில், காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதாக பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு ஓடியுள்ளனர். அந்நேரத்தில் குறித்த இளைஞனும் ஓடிய போது எதிரே வந்த நான்கு யானைகளுக்குள் இளைஞர் அகப்பட்டுக் கொண்டுள்ளான். கோபத்தில் வந்த யானை ஒன்று இளைஞரை அடித்து தூக்கி வீசியுள்ளது.

தலையில் ஏற்பட்ட காயத்தினால் இளைஞன் உயிரிழந்துள்ளார். மாலையர்கட்டு கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் லயனிதன் (வயது18) என்பவரே ஸ்தலத்தில் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்தவராவார்.

காட்டு யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களுக்குள் நுழைந்து பொது மக்களை தாக்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.

பிரதேசத்திற்கு பொறுப்பான வனஜீவராசி திணைக்கள பொறுப்பதிகாரிகள் பொது மக்களை பாதுகாப்பதில் கவனமெடுக்கத் தவறுகின்றார்கள் என வெல்லாவெளி பிரதேச பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment