மகபொல புலமைப் பரிசில் பொறுப்பு நிதியம் இனி லலித் அதுலத்முதளி பொறுப்பு நிதியம் என்று மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

மகபொல புலமைப் பரிசில் பொறுப்பு நிதியம் இனி லலித் அதுலத்முதளி பொறுப்பு நிதியம் என்று மாற்றம்

மகபொல புலமைப் பரிசில் பொறுப்பு நிதியம் எனும் பெயரை லலித் அதுலத்முதளி பொறுப்பு நிதியம் என்று மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார். இன்று (31) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

இந்த புலமைப் பரிசிலின் வரலாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூட தெரியாது என்றும், இன்று வரலாற்றை மறந்து அண்மையில் லலித் அதுலத்முதளியின் சிலையை பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் உடைத்திருந்ததாகவும் கூறினார். 

இதன் காரணமாக மாணவர்களின் எண்ணங்களில் அவரின் பெயர் பதிந்து இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மகபொல பொறுப்பு சபை என்ற வகையில் இனிமேல் அரச வங்கிகளில் மாத்திரம் நேரடியாக முதலீடு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

மகபொல பொறுப்பு நிதியத்தை வர்த்தக அலுவல்கள் அமைச்சில் இருந்து நீக்கி உயர் கல்வியமைச்சின் கீழ் முதலீடு செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment