ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை ஒக்டோபர் மாதம் 11ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டியதுடன் அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தி பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் ஆர். பவானி தாக்கல் செய்த மனு இன்று (31) அழைக்கப்பட்டிருந்தது.
நீதிபதிகளான புவனேக அலுவிகார மற்றும் எல்.டீ.பீ. தெகிதெனிய ஆகியோர் முன்னிலையில் மனு அழைக்கப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடசாலையில் அனுமதிப்பதற்காக, முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடம் இருந்து எடுத்துக் கொண்டு வந்த கடிதத்தை நிராகரித்ததால், முதலமைச்சர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டி, அச்சுறுத்தியதாக அதிபர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதன் காரணமாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அதிபர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment