வாழைச்சேனையில் என்டபிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

வாழைச்சேனையில் என்டபிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்

நல்லாட்சி அரசாங்கத்தினால் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கிலும் பல்வேரு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் வங்கிகளின் ஊடாக குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை வழங்கி தொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சிகளை முன்னேற்றும் நோக்கில் என்டபிரைஸ் ஸ்ரீலங்கா (Enter Prise Sirilanka) வேலைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

என்டபிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக மக்களின் தொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் நேற்று (வியாழக்கிழமை - 30) முழு நாளும் வாழைச்சேனை கிராம அபிவிருத்தி வங்கி (RDB BanK) வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு என்டபிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் நோக்கத்தினையும் அதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் தௌிவுபடுத்தியதுடன் அது தொடர்பான கையேடுகளும் வினியோகிக்கப்பட்டன.

கிராம அபிவிருத்தி வங்கி (RDB BanK)  யின் பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.ஆர். ரன்தெனிய, வியாபார அபிவிருத்தி முகாமையாளர் கே. சத்தியநாதன், வாழைச்சேனை வங்கி முகாமையாளர் ஜே. ஜேரோம் மற்றும் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

எஸ்.எம்.எம். முர்ஷித்

No comments:

Post a Comment