மன்னார் மாவட்டத்தின், முசலிப் பிரதேசத்தில் வறிய கோட்டிட்கு கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த கல்வித் துறையில் ஆர்வம் கொண்ட மாணவிக்கு நேற்று (03) அல்-பஸரிய்யா நிறுவனத்தினால் கற்கை நெறிக்கான நிதி உதவி வழங்கப்பட்டது.
மேலும் க/பொ/த உயர் தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்கும் இம்மாணவியின் மாதாந்த செலவில் அரைப்பகுதியையும் அல்-பஸரிய்யா நிறுவனத்தின் மூலமாக உதவி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்உதவியை நடைமுறைப்படுத்தும் அமைப்பின் தலைவர் ஜே.எம்.ஜரீத், செயலாளர் ஜே.எம்.அஸாம் மற்றும் உப தலைவர் டீ.டிம்.அன்பர் ஆகியோருக்கும் நிறுவனத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment