ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்களினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக தி/கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி மாகாண பாடசாலையிலிருந்து தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
தரமுயர்த்தப்பட்டமைக்கான பெயர்ப்பலகை திரைநீக்கமும் வரவேற்பு நிகழ்வும் நேற்று 2018.08.02ம் திகதி மாலை பாடசாலை அதிபர் ஜனாப். சலீம் அவர்களுடைய பனிப்புரைக்கமைய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நளீம் முனவ்வரா கிண்ணியா நகரசபை உறுப்பினர்களான நிவாஸ், கலிபத்துல்லா, கிண்ணியா பிரதேச சபை உறுப்பினாரான சனூஸ், பிரதி க்கல்விப் பணிப்பாளர்களான நபீஸ் முகமட் , ஜனோபர், பாடசாலையின் முன்னால் அதிபர்கள், பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment