பாகிஸ்தானில் ஆபாச சினிமா போஸ்டருக்கு தடை - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

பாகிஸ்தானில் ஆபாச சினிமா போஸ்டருக்கு தடை

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இங்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆட்சியை பிடித்தது.

அங்கு புதிய தகவல் துறை அமைச்சராக பயாஸ்-உல்-ஹசன் சோகன் நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றபிறகு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டால் முதலில் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறினால் அந்த தியேட்டர் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மனிதாபிமான மற்ற முறையில் ஒரு பெண்ணின் அரை நிர்வாண போஸ்டரை எப்படி வைக்கிறார்கள் என தெரியவில்லை. இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் மதவாத கட்சிகளின் கடும் ஆதரவில் தான் வெற்றி பெற்றார். சோகன் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியில் இருந்து பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
பயாஸ்- உல்-ஹசன் சோகன்

No comments:

Post a Comment