ஐ.எஸ். அமைப்பினருக்கு உதவிய அமெரிக்க விமானப்படை அதிகாரிக்கு 25 ஆண்டு ஜெயில் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

ஐ.எஸ். அமைப்பினருக்கு உதவிய அமெரிக்க விமானப்படை அதிகாரிக்கு 25 ஆண்டு ஜெயில்

ஐ.எஸ். அமைப்பினருக்கு உதவிய குற்றத்துக்காக அமெரிக்க விமானப்படை அதிகாரிக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்க விமான படையின் வான்வழி போக்கு வரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்தவர் இகாய்கா எரிக் காங் (35).

இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்த போது அங்கு பணிபுரிந்தார். அப்போது ஐ.எஸ். அமைப்பினருக்கு  பல்வேறு வழிகளில் உதவி செய்தார். அதன் பிறகும் அவர் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார். அதை அமெரிக்காவின் ‘எப்.பி.ஐ.’ உளவு நிறுவனம் கண்டுபிடித்தது.

கடந்த ஆண்டில் ஒகுவில் உள்ள ஸ்கோ பீல்டு ராணுவ அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட அவர் மீது ஹவாய் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்து 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment