ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் வெப்ப காலநிலையினால் பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய வரலாற்றில் ஆகக் கூடுதலான வெப்ப காலநிலை அடுத்த வரும் சில தினங்கள் ஏற்படும் என்று ஐரோப்பிய வளிமண்டவியல் பிரிவு எதிர்வு கூறியுள்ளது.
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் 47 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவக்கூடும் என்றும் வளிமண்டவியல் பிரிவு அனர்தத எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்பொழுது நிலவும் கடும் வெப்பத்தினால் சுவீடன், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அருகாமையிலுள்ள பனி மலைகள் உருக ஆரம்பித்துள்ளன. கடந்த சில தினங்களாக நிலவி வரும் வெப்பநிலையினால் பனிமலை 13 அடிகளினால் குறைவடைந்திருப்பதாக ஸ்ரொக்கொம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்திலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனவிலங்களை வேறுஇடங்களுக்கு, இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெப்பநிலையை அடுத்து பனிமலை உருகியதால் பல வன விலங்குகள் உயிரிழந்துள்ளன.
லண்டனிலும் மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களை பாதுகாப்பதற்கு நேற்று விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. போல்டின் கடல் பகுதியில் நச்சுத்தன்மை கலந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து, லித்துவேனியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும் இவ்வாறான எச்சரிக்கையை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது. அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கான குழாய் நீர் விநியோகத்திலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய பவுசர்கள் மூலம் பொதுமக்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பின்லாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளில் நீர்விநியோக நடவடிக்கை நேற்று ஆரம்பமானது. இதேவேளை கடும் வெப்பத்தின் காரணமாக தென்கொரியாவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் உற்பத்தியை பாதுகாப்பதற்கு நேற்று முதல் அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தென்கொரியாவில் தேசிய அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment