இன்பராசாவுக்கு எதிராக கிண்ணியா நகர சபை உறுப்பினர் பொலீஸில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

இன்பராசாவுக்கு எதிராக கிண்ணியா நகர சபை உறுப்பினர் பொலீஸில் முறைப்பாடு

புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இன்பராசா என்பவரால் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றில் காத்தாங்குடி, மூதூர், கிண்ணியா உட்பட முஸ்லீம்களிடம் விடுதலைப் புலிகளின் 5000 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் இந்நாட்டு சிங்கள, தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறிய சம்பவம் ஒரு சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தலங்களில் உலா வந்ததை இட்டு நேற்று (30) கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் இன்பராசாவுக்கு எதிராக கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

உண்மைக்குப் புறம்பான இவ்விடயம் குறிப்பிட்ட பிரதேச மக்களை மாத்திரம் அன்றி இந்நாட்டு முஸ்லீம்கள் அனைவரின் உள்ளங்களையும் மிகவும் புன்படுத்தியுள்ளதோடு இம் முஸ்லீம்களுக்கு எதிராக ஏதும் திட்டமிட்ட சதி ஒன்று அரங்கேற்றப் படலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே இவ்வாறான இன மத பேதங்களை உண்டாக்கும் சதிகாரர்களுக்கு எதிராக எமது அரசும் பொலீஸாரும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு கிண்ணியா பொலீஸில் குறித்த முறைப்பாட்டையும் செய்தார்.

No comments:

Post a Comment