இன ஒற்றுமையை சீர்குழைக்கும் விதமாக இனவாத நச்சுக்கருத்தை விதைத்த புணர் வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா என்பவரை (ICCPR) என்ற சட்டத்தின் கீழால் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று 30.08.2018 குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இன்பராசா என்பவரால் அண்மையில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றில் காத்தாங்குடி, மூதூர், கிண்ணியா உட்பட பல பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களிடம் விடுதலைப் புலிகளின் 5000 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் இந்நாட்டு சிங்கள, தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி இனவாதக்கருத்துக்களை மீடியாக்கள் மூலம் வெளியிட்டிருந்தார்.
உண்மைக்குப் புறம்பான இவ்விடயம் குறிப்பிட்ட பிரதேச மக்களை மாத்திரம் அன்றி இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரின் உள்ளங்களையும் மிகவும் புன்படுத்தியுள்ளதோடு இம்முஸ்லிம்களுக்கெதிராக ஏதும் திட்டமிட்ட சதி ஒன்று அரங்கேற்றப் படலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியள்ளது.
இலங்கையிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் பொய்க்குற்றச்சாட்டொன்றை சுமத்தி அதன் மூலம் அரசியல் இலாபமடையவும், இனங்களுக்கிடையில் குழப்ப நிலையை உருவாக்கவும், வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சித்த இந்த இன்பராசா போன்றவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
No comments:
Post a Comment