ஆயிரம் எஞ்சின் வலுவுக்கு மேற்படாத மோட்டார் வாகனத்துக்காக அறவிடப்படும் தயாரிப்பு வரி இன்று முதல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஆயிரம் எஞ்சின் வலுவுக்கு மேற்படாத பொதுவான மோட்டார் வாகனம் ஒன்றுக்காக ஆகஸ்ட் மாதம் 1ம் திகதியில் இருந்து 1,500 000 வரியாக விதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் எஞ்சின் வலுவுக்கு மேற்படாத மின்சக்தி மூலம் செலுத்த கூடிய இரட்டை வாகனத்துக்கான வரி 1,250 000 ஆகா மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 2018 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கடன் சான்று (letter of credit) செலுத்தப்பட்ட, 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அனுமதிபெற்ற வாகனங்களுக்கு இந்த வரி ஏற்புடையதாகாது.
இந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்படும் வாகனம் முன்பிருந்த எஞ்சின் வலுவின் அடிப்படையிலான தயாரிப்பு வரிக்கு உற்பட்டதாக இருக்கும் .
No comments:
Post a Comment