இம்ரான்கான் மீது ஊழல் புகார் : 7ஆம்திகதி நீதிமன்றில் ஆஜராக சம்மன் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

இம்ரான்கான் மீது ஊழல் புகார் : 7ஆம்திகதி நீதிமன்றில் ஆஜராக சம்மன்

பாகிஸ்தானில் அரசு ஹெலிகாப்டரை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் 7ஆம்திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெக்ரிக் - இ -இன் சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் வருகிற 11ஆம்திகதி அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் அவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கைபர் - பக்துன்குவா மாகாணத்தில் இவரது பாகிஸ்தான் தெக்ரிக் - இ - இன்சாப் கட்சி ஆட்சி நடத்தியது.

அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொத்தம் 72 மணி நேரம் உபயோகித்து இருப்பதாகவும் அதற்குரிய வாடகை கட்டணம் ரூபா 2 கோடியே 17 லட்சம் செலுத்தவில்லை என்றும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய பொறுப்புடமை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 18ஆம்திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இம்ரான்கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தேர்தல் பணியில் இருந்ததால் அவர் ஆஜராகவில்லை. அவரது வக்கீல் ஆஜரானார். இந்த நிலையில் நேற்று (03) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 7ஆம்திகதி நீதிமன்றில் ஆஜராக இம்ரான்கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

கைபர் பக்துன்குவா மாகாண முதலமைச்சர் பெர்வேஷ்கட்டாக் பதவி வகித்தார். அவர் மற்றும் 4 பேர் இந்த வழக்கில் ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment