கிளிநொச்சி யுவதி கொலை தொடர்பில் ஒருவர் கைது - 5 மாதம் கர்ப்பமுற்ற நிலையிலேயே மரணம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

கிளிநொச்சி யுவதி கொலை தொடர்பில் ஒருவர் கைது - 5 மாதம் கர்ப்பமுற்ற நிலையிலேயே மரணம்

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸின், பாரிய குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது. இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என அறிய முடிகிறது.

முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா எனும் குறித்த பெண், கிளிநொச்சி, பன்னங்கண்டி பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பொலிசார் குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த பெண், கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் இறப்புக்கான காரணம் கயிறு போன்ற ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் ஐந்து மாதக் கர்ப்பிணி எனவும், கொலை செய்யப்பட்ட அன்று அவர் வன்புணர்வுக்கு உட்ப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது இடது புற கண்ணுக்கு மேல் தலைப்பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கணவனால் கைவிடப்பட்டவர் என்பதோடு, ஜந்து வயதில் மாற்றுத்திறனாளி பெண் குழந்தை ஒன்றும் அவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக நேற்று முன்தினம் (28) மாலை 7.15 மணிக்கு ஆடைத் தொழிற்சாலையில் தனது கடமையை முடித்திவிட்டு திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரும் குற்றப் பிரிவுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனுடன் தொடர்புடைய ஏனைய செய்திகளை பார்வையிட
1. https://www.newsview.lk/2018/08/blog-post_786.html
2. https://www.newsview.lk/2018/08/blog-post_9852.html

No comments:

Post a Comment