வவுனியாவில் சட்ட விரோதமாக இயங்கும் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரால் முற்றுகை - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

வவுனியாவில் சட்ட விரோதமாக இயங்கும் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரால் முற்றுகை

வவுனியாவில் இயங்கிவரும் தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு இன்று (31) காலை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு இடம்பெற்றுவரும் நவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வியடம் தொடர்பாக மேலும் தெரிவிக்கும்போது, வவுனியாவில் காலை முதல் பிற்பகல் வரை இரண்டு மருந்தகங்கள், இரண்டு தனியார் வைத்தியசாலைகள், மூன்று ஆயுள்வேத வைத்திய நிலையங்களுக்கு திடீரென்று விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை அவதானித்துள்ளார். 
இதன்போது தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறும், வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்குப்பறம்பாக ஆங்கில மருந்து வில்லைகள் சிலவற்றையும் அங்கிருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலாம் குறுக்குத்தெரு மற்றும் வவுனியா வைத்தியசாலை சுற்று வட்டப் பகுதியில் இயங்கும் இரு தனியார் வைத்தியசாலைகளின் கதிரியக்க பிரிவு போதிய வசதியின்றி இயங்குவதுடன் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment