அம்பலாங்கொட பகுதியில் கப்பம் பெறுவதற்கு முயற்சித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் விடுத்து 1 இலட்சம் கப்பம் கோரிய நிலையில், 50,000 ரூபாவை முற்பணமாக பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெந்தோட்டை பகுதியை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை இன்று (3) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment