மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தயாராகும் தபால் தொழிற்சங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 3, 2018

மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தயாராகும் தபால் தொழிற்சங்கம்

நாளைய தினத்திற்கு முன்னர் தபால் ஊழியர்களுக்கு உரிய ஜூன் மாத சம்பளத்தை வழங்காவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் கூறியுள்ளது. 

அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் 06 நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார கூறினார். 

அத்துடன் ஜூன் மாதத்தில் 06 நாட்களுக்குறிய சம்பளத்தை வழங்காதிருக்க அமைச்சரவை பத்திரம் ஒன்றும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார். 

இவ்வாறு சம்பளம் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த சங்கத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment