100 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் ராஜகிரிய மற்றும் பொரள்ளை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 85 கிராமும் 910 மில்லிகிராம் ஹெரோய்ன் கண்டெடுக்கப்பட்டதாக வெலிக்கட பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதுதவிர பொரள்ளை, வனாத்தமுல்ல பிரதேசத்தில் வைத்து 11 கிராமும் 160 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பொரள்ளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மற்றொருவரிடம் இருந்து 03 கிராமும் 540 மில்லிகிராம் ஹெரோய்ன் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (3) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment