விபத்தில் காயமடைந்த பாடசாலை சிறுவர்களை பார்வையிட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் - பாடசாலைக்கு அழைத்து செல்ல விசேட பேரூந்து சேவை - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

விபத்தில் காயமடைந்த பாடசாலை சிறுவர்களை பார்வையிட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் - பாடசாலைக்கு அழைத்து செல்ல விசேட பேரூந்து சேவை

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் இன்று (31) வவுனியா பொது வைத்தியசாலையில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

வவுனியா ஏ9 வீதியில் புதூர் சந்திக்கு அருகாமையில் இ.போ.சபை பேரூந்து பாடசாலை சிறுவர்கள் சென்ற முச்சக்கர வண்டியுடன் நேற்றையதினம் (30) மோதியதில் 9 பாடசாலை சிறுவர்கள் காயமடைந்ததுடன் எட்டு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் சிறுவர்களின் உறவினர்களை வவுனியா பொது வைத்தியசாலையில் சந்தித்த வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அத்துடன், நாளையிலிருந்து (01) சிறுவர்களை பாடசாலைக்கு அழைத்து செல்வதற்கு விசேட இ.போ.சபை பேரூந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து சிறுவர்களின் பெற்றோர்களுடன் உரையாடிய அவர் இலங்கை சட்டத்தின் பிரகாரம் முச்சக்கர வண்டியில் ஆறு சிறுவர்களை மாத்திரமே ஏற்றி செல்ல முடியும். அன்றையதினம் 11 சிறுவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர். இருந்த போதும் பரிசங்குளம் மக்கள் குடியிருப்பிலிருந்து புளியங்குளம் பாடசாலை வரை இ.போ.சபை பேரூந்து இயக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் விபத்தில் பிள்ளையை பறிகொடுத்த பெற்றோருடன் உரையாடிய பிரதிபொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு ஆறுதல் கூறியிருந்தார். விபத்தில் உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரிகைகளுக்கான செலவுகளை தொழிலதிபர் எஸ்.குணரத்தினம் ஏற்றுக்கொண்டார். 

விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களை பார்வையிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிறுவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் சிறுவர்களுக்கு உதவி பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இதனுடன் தொடர்பான செய்திக்கு
https://www.newsview.lk/2018/07/blog-post_908.html

No comments:

Post a Comment