இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமற் போனோரினதும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரினதும் விபரங்கள் அடங்கிய பெயரப்பட்டியல்களைத் தான் வெளியிடத்தயார் என்று காணாமற் போனோருக்கான அலுவலக தவிசாளர் திரு.சாலிய பீரிஸ், முல்லைத்தீவில்லை தெரிவிக்கவில்லை.
காணாமற் போனோருக்கான அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை பின்வருமாறு:
பத்திரிகை அறிவித்தல்
காணாமற் போனோருக்கான அலுவலகத்தின் (OMP) தவிசாளரை மேற்கோள்காட்டி, சில கட்டுரைகளும் செய்திகளும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டமை குறித்து (OMP) யின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
மேற்படி தகவல்களில், இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமற் போனோரினதும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரினதும் விபரங்கள் அடங்கிய பெயரப்பட்டியல்களைத் தான் வெளியிடத்தயார் என OMP யின் தவிசாளர் திரு.சாலிய பீரிஸ், முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் நடத்திய குடும்பங்களுக்குக் கூறியதாக செய்திகள் பிரசுரிக்கபபட்டிருந்தன. மேற்படித் தகவல்கள் பிழையானவை.
காணாமற் போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களும் கடந்த சனிக்கிழமை யூன் மாதம் 02 ஆந் திகதி முல்லைத் தீவிற்கு விஜயம் செய்து காணாமற் போனோரின் குடும்ப உறவுகளையும், சிவில் சமூக அமைப்புக்களையும், காணாமற் போனோரின் சார்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்களையும், ஊடகங்களையும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது மேற்படி ஆணையாளர்கள் OMP அலுவலகத்தின் அமைப்பு ரீதியான திட்டங்களையும், உபாய மார்க்கங்களையும் எடுத்துக் கூறி, பொது மக்களின் கருத்துக்களை அறிந்து, அவர்களின் யோசனைகளை OMP கட்டமைப்பிலும் செயற்பாட்டிலும் கூட்டிணைப்பது (OMP) யின் நோக்கமாகும். என எடுத்து விளக்கினர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட காணாமற்போனோரின் குடும்பங்களையும் தவிசாளர் சந்தித்தார்.
இதன்போது சரணடைந்தோரினதும் காணாமற்போனோரினதும் பெயர்ப்பட்டியல் (OMP) அலுவலகத்தில் உள்ளது என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தவிசாளர் குறிப்பிடவில்லை. (OMP) அலுவலகத்தில் அத்தகைய பெயர்ப்பட்டியல் கிடையாது என்றே குறிப்பிடப்பட்டது.
அதே சமயம், OMP அலுவலகத்தின் முன்னுரிமைகளில் சரணடைந்தோரினதும் காணாமல் ஆக்கப்பட்டோரினதும் பெயரப்பட்டியலை பெற்றுத்தருமாறே மேற்படி குடும்ப உறுப்பினர்கள் தவிசாளரிடம் வேண்டிக்கொண்டனர்.
இவ்வேண்டுகோளை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு (OMP) யின் தவிசாளர் கேட்டுக் கொண்டார். இதன்போது (OMP) யின் உடனடியாக உரிய அதிகாரிகளிடம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனக்கூறப்பட்டது.
போலியான உறுதிமொழிகளையோ அல்லது உத்தரவாதங்களையோ உடனடித்தீர்வுகளையோ இச்சிக்கலான பிரச்சினைக்கு வழங்க முடியாது என தவிசாளர் வலியுறுத்திக் குறிப்பிட்டார். காணாமற்போனோரின் குடும்பங்களுடன் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு, காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதில் தீவிரமுயற்சி எடுப்பதே OMP) அலுவலகத்தின் குறிக்கோளாகும் என்றும் தவிசாளர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,
தவிசாளர்
காணாமற் போனோருக்கான அலுவலகம் ( OMP)

No comments:
Post a Comment