மத்தளை வரையான Flydubai விமான ​சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

மத்தளை வரையான Flydubai விமான ​சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

மத்தளை வரையான Flydubai விமான ​சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தமது விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு Flydubai விமான ​சேவை கோரிக்கை விடுத்திருந்ததாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார்.

மத்தளை வரையான தமது சேவை முன்னெடுக்கப்படும் தினங்களில், நாளொன்றுக்கு 13 தொடக்கம் 15 வரையான பயணிகள் மாத்திரமே உள்ளதாக Flydubai விமான ​சேவை அறிவித்துள்ளது.

இதனால் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்நோக்குவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்தளை வரையான Flydubai விமான ​சேவையின் போது 26 சந்தர்ப்பங்களில் விமானம் மீது பறவைகள் மோதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment