அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உருக்கமான விவாதத்தின் பின்னர் அம்பாறை பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு 27 மில்லியன் நிதியை உடன் வழங்குமாறு பிரதமர் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உருக்கமான விவாதத்தின் பின்னர் அம்பாறை பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு 27 மில்லியன் நிதியை உடன் வழங்குமாறு பிரதமர் உத்தரவு

கடந்த பெப்­ர­வரி மாதம் அம்­பா­றையில் இடம்­பெற்ற வன்செயல்களினால் முழு­மை­யாக சேதங்­க­ளுக்­குள்­ளான அம்பாறை ஜும் ஆ பள்­ளி­வா­சலின் நஷ்டஈடு­ ம­திப்­பீட்டுத் தொகையான 27 மில்­லியன் ரூபா­வையும் தாம­தி­யாது வழங்குவதற்கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

அத்­தோடு கடந்த வருடம் நவம்பர் மாதம் கிந்­தோட்­டையில் இடம்பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளுக்கு ஏன் இது­வரை நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் புனர்வாழ்வு அதி­கா­ர­சபை அதி­கா­ரி­க­ளிடம் கேள்வி எழுப்­பிய பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கிந்­தோட்டை நஷ்டஈடு­க­ளையும் வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்டிக்கொண்டார்.

நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் பிர­தமர் தலை­மையில் கண்டி வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்துக்­க­ளுக்­கான நஷ்ட ஈடுகள் வழங்கும் நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்றம் தொடர்­பாக ஆராயும் கூட்­ட­மொன்று நடை­பெற்­றது.

இக்­கூட்­டத்தில் அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் மலிக் சம­ர­விக்­ரம உட்­பட பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர். புனர்­வாழ்வு அமைச்சு மற்றும் புனர்வாழ்வு அதி­கா­ர­ச­பையின் அதி­கா­ரி­களும் பங்கு கொண்டிருந்தனர்.

இக்­கூட்­டத்தின் போது அம்­பா­றையில் இடம் பெற்ற வன் செயல்களினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் மற்றும் சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்­கு­வது தாம­த­மா­கின்­றமை தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் அம்­பாறை ஜும் ஆ பள்­ளி­வா­சலின் நஷ்­ட­ஈடு மதிப்­பீடு 27 மில்­லியன் ரூபாய்கள் என தெரி­விக்­கப்­பட்­டது. இந்த நஷ்ட ஈட்­டினை வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்றினைத் தயா­ரித்து தாம­த­மின்றி சமர்ப்­பித்து அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் பிர­தமர் புனர்­வாழ்வு அதி­கார சபை அதிகா­ரி­களை வேண்­டிக்­கொண்டார். 

இது­தொ­டர்பில் புனர்­வாழ்வு அமைச்சின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம்.பதுர்­தீனைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, கண்டி வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளுக்கு நஷ்ட ஈடு வழங்­கு­மாறு பிர­த­ம­ரினால் உத்­த­ரவு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அம்­பாறை மற்றும் கிந்­தோட்டை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்கப்பட்ட சொத்­துக்­க­ளுக்கு நஷ்ட ஈடு எவ்­வாறு வழங்­கப்­பட வேண்­டு­மென தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

1987 ஆம் ஆண்டின் சுற்று நிரு­பத்­தின்­படி வன் செயல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­களின் நஷ்ட மதிப்­பீட்டில் 20 வீதமே நஷ்ட ஈடாக வழங்க முடியும். அத்­தோடு பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நஷ்ட ஈடாக ஒரு மில்­லியன் ரூபா­வுக்கு உட்­பட்ட தொகையே வழங்க முடியும். இவ்­வாறே சுற்று நிருபம் தெரி­விக்­கி­றது. இதன் கார­ண­மா­கவே அம்பாறை, கிந்­தோட்டை நஷ்ட ஈடுகள் வழங்­கு­வதில் தாமதம் ஏற்பட்­டது.

அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட ஜும்ஆ பள்ளிவாசல் உட்­பட மற்றும் சொத்­துக்­க­ளுக்கு நஷ்ட ஈட்­டினைப் பெற்­றுக்­கொ­டுக்க அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை தயார் செய்­யும்­படி பிர­தமர் பணித்­தி­ருக்­கிறார். தற்­போது அதற்­கான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அடுத்த வார­ம­ளவில் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க முடியும் என்றார். 

கிந்தோட்டையில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற வன்செயல்களினால் 142 சொத்துக்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2018 பெப்ரவரி மாதம் அம்பாறையில் இடம் பெற்ற வன் செயல்களினால் ஜும் ஆ பள்ளிவாசல் ஒன்று உட்பட 13 சொத்துகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment