சம்மாந்துறையைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார்.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதிஉத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எச்.எம். நவவி தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட குறித்த பாராளுமன்ற வெற்றிடத்திற்கே எஸ்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சியினால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (06) முதல் அமுலாகும் வகையில், தேர்தல்கள் ஆணையகத்தினால் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே 23 ஆம் திகதி, எம்.எச்.எம். நவவி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment