யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும் குழுவில் இலங்கையும் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும் குழுவில் இலங்கையும் தெரிவு

ஆசிய பசுபிக் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையிலான கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான குழுவில், இலங்கையும் இடம்பிடித்துள்ளது. 2018 - 2022 ஆண்டு வரையான காலப்பகுதிக்கு குறித்த குழுவில் இலங்கையும் அங்கத்துவம் வகிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

பரிஸ் நகரில் நேற்று (06) நடைபெற்ற யுனெஸ்கோவின் 7ஆவது கூட்டத் தொடரின் போதே இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இவ் வாக்கெடுப்பிலேயே இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த வாக்கெடுப்பில் பங்களாதேஷ், சீனா, ஜப்பான், கசகஸ்தான், தாய்லாந்து, மலேசியா, பலாவு மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகள் போட்டியிட்டன. பலாவு இதற்கான தேர்தலில் இருந்து விலகிக்கொண்டதை அடுத்து ஏனைய ஏழு நாடுகள் தேர்தலில் கலந்துகொண்டன. 

வாக்கெடுப்பில் சீனா, இலங்கை, ஜப்பான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 123, 122, 107, மற்றும் 98 வாக்குகளை பெற்றுக்கொண்டன. 

ஆசிய பசுபிக் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையிலான கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான இந்த குழுவில் 4 நாடுகள் அங்கம் வகிக்கும் நிலையில் இலங்கை 4 வது நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment