பெருநாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான சம்பளம் முன்கூட்டியே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது - இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

பெருநாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான சம்பளம் முன்கூட்டியே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது - இம்ரான் எம்.பி

நோன்பு பெருநாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான சம்பளம் முன்கூட்டியே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். 

வியாழக்கிழமை காலை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை பாராளுமன்ற கட்டட தொகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின் வெளியிட்டுள்ள ஊடாக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்த மாதம் முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாள் வரவுள்ளதால் ஆசிரியர்களின் சம்பளத்தை முன்கூட்டியே வழங்க நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் என்னிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர் இது தொடர்பாக பாராளுமன்ற கட்டட தொகுதியில் கல்வி அமைச்சர் அகில்விராஜ் காரியாவசத்தை சந்தித்து உரையாடினேன்

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை பெருநாளை முன்னிட்டு சம்பளம் முன்கூட்டியே வழங்கப்பட்ட எந்த வரலாறுகளும் இல்லை எனவே இது தொடர்பான சுற்றுநிருபங்களை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் நிதிப்பிரிவின் பணிப்பாளருக்கு கல்வி அமைச்சர் உத்தரவிட்டார்

மேலும் இது தொடர்பாக நிதி அமைச்சின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது அதன் அனுமதியும் கிட்டைக்கபெற்றால் வரலாற்றில் முதன்முறையாக நோன்பு பெருநாளை முன்னிட்டு சிங்கள, தமிழ் ,முஸ்லிம் ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படும்.

No comments:

Post a Comment